கண்விழிப்பார்களா கம்யூனிஸ்டுகள்?

திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் அடர் சிவப்பு நீர்த்து காவியாகி உள்ளது. கால் நூற்றாண்டு கால கம்யூனிச ஆட்சியை வீழ்த்தி பாஜக வெற்றிபெற்றுள்ளது.
மிகச்சிறப்பான முதல்வர், ஏழைப்பங்காளர், ஊழலில்லா ஆட்சி, மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் என்று திரிபுரா மாநிலத்தின் கம்யூனிஸ்ட் ஆட்சி சுட்டிக்காட்டப்பட்டு பெருமை பேசப்பட்டது.

இருந்தபோதும் இப்போது பதவி நாற்காலியை விட்டு இறக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலைவிடவும் இத்தேர்தலில் அக்கட்சியின் வாக்குவங்கி 3சதவீதம் இழந்துள்ளது.
அதேநேரம் வெற்றிபெற்ற பாஜகவின் வாக்குவங்கி 42சதவீதம் அதிகரித்துள்ளது.பாஜகவுக்கு இளைஞர்களை அதிகளவில் சேர்த்து வாக்குவங்கியை குறுகிய காலத்தில் பெருக்கிக்கொண்டது ஒரு காரணம்.
மற்றொரு விஷயம் திரிபுரா சுதேசி மக்கள் முன்னணியுடன் பாஜக வைத்த கூட்டணி.
ஒரு தேசிய கட்சி என்ற தனது அந்நியமுகத்தை உங்கள் கட்சி என்று சொல்லவைக்கை இக்கூட்டணி பாஜகவுக்கு உதவியாக இருந்தது.ஆட்சிமீது அதிருப்தி இல்லை என்று தெரிந்துகொண்ட பாஜக புதுவழியில் ஆட்சியை மாற்ற வெற்றிகரமான கணக்கீடு செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

இந்தியாவில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்துவந்த கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் மட்டும் இப்போது தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இந்நிலைமை மாறவேண்டும் என்றால் அக்கட்சி தலைவர்கள் கண்விழிக்க வேண்டும். காலத்துக்கேற்ற கணக்கீடுகளை செய்யவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here