கொல்கத்தா: பாஜக தலைவர்களின் கரப்பான்பூச்சி கனவு மேற்குவங்காளத்தில் பலிக்காது என தெரிவித்துள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.திரிபுராவில் பாஜக பெற்ற வெற்றி அடுத்தமாநிலமான மேற்குவங்காளத்திலும் எதிரொலிக்கும் என்று அக்கட்சி தலைவர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.அவரளித்த பேட்டி: திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அடிமை மனோபாவத்துடன் இருந்துவிட்டார்கள். மாணிக் சர்காரின் ஆட்சிமீதான மக்கள் அதிருப்தி, கூட்டணிக்கு காங்கிரஸ் ஒத்துவராதது ஆகியவை பாஜக அரியணை ஏற உதவின. வெறும் 5%வாக்குகளால்தான் கம்யூனிஸ்ட்கள் தோற்றுள்ளனர்.
ஆனால், பாஜகவின் பாட்சா மேற்குவங்காளத்தில் பலிக்காது. மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் அக்கட்சிக்கு இறங்குமுகம்தான் என்றார்.
பாஜக தலைவர்கள் மயில் தோகை விரித்தாடுவது போன்று கனவு காண்கிறார்கள். ஆனால், கரப்பான் பூச்சிகள் இறக்கை விரித்து ஒருநாளும் மயிலாக போவதில்லை. இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.