ஏர்செல் நிறுவனத்தால் திவாலாகும் ரிசார்ஜ் விற்பனையாளர்கள்!

சென்னை:திவாலாகி உள்ள ஏர்செல் நிறுவனத்தால் தமிழகம் முழுவதும் உள்ள பல ரீசார்ஜ் கடைக்காரர்களும் திவாலாக உள்ளனர்.

ஏர்செல் நிறுவனம் தங்களை திவாலானதாக அறிவிக்குமாறு தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் மனு செய்துள்ளது. வங்கிகளில் அந்நிறுவனம் பெற்ற கடன் தொகை ரூ.15,500கோடியை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தமாதம் மட்டுமே வாடிக்கையாளர்கள் ரிசார்ஜ் செய்துள்ள ரூ.15ஆயிரம் கோடியில் சுமார் ரூ.3ஆயிரம் கோடிக்கு பேசியிருக்க வாய்ப்புள்ளது. மீதமுள்ள ரூ.12ஆயிரம் கோடியை ஏர்செல் நிறுவனம் எப்படி வழங்கவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும், ரிசார்ஜ் விற்பனையாளர்களிடமிருந்து இந்நிறுவனம் ரூ.12ஆயிரம் கோடி வரை பெற்று கூப்பன்களை அளித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 15ஆயிரம் பேர் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களாகவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மறுவிற்பனையாளர்களாகவும் ஏர்செல் ரிசார்ஜ் செய்துவருகின்றனர்.ஏர்செல் திவாலானதை தொடர்ந்து அவர்களது பொருளாதார நிலையும் திவாலாகும் நிலையை அடைந்துள்ளது.

இதுகுறித்து டிராய், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று ரிசார்ஜ் விற்பனையாளர் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here