முதலை வயிற்றில் இருந்த வாலிபர் கை, கால் மீட்பு!

இந்தோனேசியா: வாலிபரை விழுங்கிய முதலையின் வயிற்றிலிருந்து அவரின் கை,கால்கள் மீட்கப்பட்டன.
இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ பகுதியில் எண்ணெய் பனை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
அங்குள்ள ஆற்றுப்பகுதியில் பெரிய முதலை ஒன்று வசித்துவந்தது.

இரு தினங்களுக்கு முன்னர் எண்ணெய்பனை தோட்டத்தில் வேலைசெய்யவந்த வாலிபர் ஒருவரை காணவில்லை.
அவரது வாகனமும், செருப்பு, பை ஆகியவை ஆற்றின்கரையில் இருந்தன.இதனால் அவரை முதலை தின்றிருக்கலாம் என மக்கள் சந்தேகப்பட்டனர்.
இரு தினங்களாக அப்பகுதி முழுவதும் முதலையை தேடி பிடித்தனர்.
20அடி நீளமுள்ள அந்த முதலையை கல்லால் தாக்கி கொன்றனர்.உடல்பருத்து கொழுத்திருந்த முதலையில் வயிற்றில் இருந்து மாயமான வாலிபரின் கை,கால்களை மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here