தஞ்சை கோவிலில் பலகோடி மதிப்பு சிலைகள் கொள்ளை!

தஞ்சாவூர்: தமிழகத்தின் கலை, கலாச்சாரத்துக்கு சான்றாக விளங்கும் தஞ்சை கோவிலில் பலகோடி மதிப்பு சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் சிலை காணாமல் போனதாக கூறப்பட்டது.
இது குறித்து சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல், பெரியகோயில் சிலைகள் மாயமானது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தஞ்சை பெரியகோயிலில் காணாமல்போன ராஜராஜ சோழன் சிலை, லோகம்மாள் சிலை விரைவில் மீட்கப்படும் என தெரிவித்து உள்ளார்.தஞ்சை பெரியகோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் காணாமல்போய் உள்ளன.
ராஜராஜ சோழன் சிலை மற்றும் மனைவி லோகமாதேவி சிலை உட்பட 13 சிலைகள் மாயமாகி உள்ளன.
சிலைகள் குஜராத்தில் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளது. அருங்காட்சியத்தில் உள்ள சிலைகளை விரைவில் மீட்போம் என எஸ்பி செந்தில்குமார் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here