காட்டில் அனாதையான குரங்கு! ஹெலிகாப்டரில் சென்று மீட்கப்பட்டது!!

காங்கோ: வனப்பகுதியில் அனாதையாய் தவித்துவந்த மனிதக்குரங்கு ஹெலிகாப்டரில் மீட்டு வரப்பட்டது.
காங்கோ நாட்டில் உள்ள வனப்பகுதியில் யானை, மனிதக்குரங்கு, பாம்புகள் அதிகளவில் வசிக்கின்றன.அங்கு வேட்டைக்காரர்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
வனப்பகுதியை ஹெலிகாப்டரில் கண்காணித்து சிகிச்சை தேவைப்படும் விலங்குகளுக்கு உதவ பறக்கும் டாக்டர் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.பெல்ஜியத்தை சேர்ந்த அந்தோணி கெரி என்பவர் காங்கோ வனப்பகுதியில் ஹெலிகாப்டரில் அடிக்கடி சென்று பார்வையிடுவார். அவருடன் 3கால்நடை மருத்துவர்கள் செல்வார்கள்.
வானத்தில் இருந்தே வனப்பகுதியில் விலங்குகள் எதற்கும் சிகிச்சை தேவைப்படுகிறதா என்று இக்குழு கண்காணிக்கும்.

தேவைப்படும் விலங்குகளுக்கு முதலுதவி அளித்து அவற்றை மீட்டு விலங்குகள் காப்பகத்தில் சேர்க்கும் பணியை பறக்கும் டாக்டர் குழுவினர் செய்துவருகின்றனர்.
அவர்கள் வனப்பகுதியில் தனியே அலைந்துகொண்டிருந்த 3வயது ஆண் மனிதக்குரங்கை மீட்டனர்.ஹெலிகாப்டரில் வரும் போது அந்தோணி கெரியுடன் அக்குரங்கு குறும்பு செய்யும் விடியோ வெளியாகி இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here