காலாவுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு!

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் டீசர் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தந்தி டிவிக்கு அளித்த பேட்டி:
எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

 

“ரஜினிகாந்த் அவர்கள் தமிழில் இருக்கக்கூடிய மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர்.
மிக நுட்பமாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடியவர்.
ஆனால் ரஞ்சித், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து ஒரு மோசமான வணிக சினிமாவை அதுவும் கேங்ஸ்டர் சினிமாவை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனையான ஒன்று.

அதுவும் ரஜினிகாந்த் இன்னும் ஒரு சில மாதங்களில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இதுமாதிரியான திரைப்படங்கள் மூலம் அவருக்கு வலுவைச் சேர்ப்பது. அல்லது அம்பேத்கர் முழக்கங்களை அவருடையை திரைப்படங்களின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவது என்பது, சினிமாவால் ஈர்க்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களை ரஜினிகாந்த் கட்சிக்கான தொண்டர்களாக மாற்றுவதற்குத்தான் பயன்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


தனது ட்விட்டர் பக்கத்தில் “அம்பேத்கரின் அரசியல் முழக்கம் வணிக சினிமா ஒன்றின் பிரச்சார வாசகமாக்கப்பட்டிருக்கிறது. கொடுமை!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here