காலாவும், கருணாநிதியும்!

சென்னை:காலா படத்தில் நடப்பதைப்போன்ற ஒரு சம்பவம் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும்  நடந்துள்ளது.

உடல்நலக்குறைவால் திமுக தலைவர் தீவிர அர்சியலில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார் கருணாநிதி.
கோபாலபுரம் வீட்டில் தங்கியுள்ள அவரை கொள்ளுப்பேரன் மகிழன் சந்தித்து கிரிக்கெட் விளையாட அழைத்துள்ளார்.

கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசின் பேரன் மகிழன் பேட்டிங் செய்ய கருணாநிதி பவுலிங் செய்யும் விடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பகிர்ந்து திமுக தொண்டர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.  இதேபோல் காலாவிலும் ரஜினி பேரக்குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. காலா படம்குறித்து இயக்குநர் ரஞ்சித் கூறுகையில், காலா படத்தில் ரஜினி நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவராக காட்டியுள்ளோம். நெல்லை தமிழ்பேசி அசத்தியுள்ளார் ரஜினி.
படத்தில் கரிகாலன் என்பது அவர் பெயர். அதனை சுருக்கி காலா என்று வைத்துள்ளோம்.காலா என்ற கதாபாத்திரம் எனது தாத்தா பஞ்சாட்சரம்தான்.
ஒரு பிரமிப்பான மனிதராக் அவரைப்பார்த்து வளர்ந்தேன். அதை அடிப்படையாக வைத்தே காலா கேரக்டரை உருவாக்கினேன்.

படத்தில் காலா ரொம்ப பிடிவாதமான ஆள். ஊர்மக்களை வழிநடத்தும் தலைவர். ஒருபக்கம் உறுதியானவராகவும், மறுபக்கம் மனைவியுடன் ரொமான்ஸ், குழந்தைகளுடன் காதல் கதை பேசி நெகிழ்வது, பேரக்குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுவது என்று பல பரிமாணங்களில் ரகளை செய்துள்ளார் என்றார் ரஞ்சித்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here