கவுரி லங்கேஷ் கொலை! முக்கிய குற்றவாளி கைது!

பெங்களூர்: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கியப்புள்ளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் மர்மநபர்களால் கடந்த செப்டம்பர் 5ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.இவ்வழக்கை விசாரிக்க தனிப்படையினர் அமைக்கப்பட்டனர்.
கவுரிலங்கேஷை போன்றே இடதுசாரி மற்றும் கடவுள் மறுப்பு எழுத்தாளர்களும் ஏற்கனவே கொலை செய்யப்பட்டனர்.
எனவே, இந்து தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இக்கொலையில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று பேசப்பட்டது.

நடிகர் பிரகாஷ்ராஜ் இதனை தொடர்ந்து பேசி வந்தார்.
இந்நிலையில் பெங்களூர் பஸ் நிலையத்தில் வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது.
அவரது பெயர் நவீன் குமார் என்றும் குற்றவாளிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தார் என்றும் தெரியவந்துள்ளது.இவர் சிக்கமகளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், இந்து அமைப்பை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இவரிடமிருந்து கைத்துப்பாக்கி கைப்பற்றதுஎன்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here