தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் வலை!

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இருவர் மீது கொலைமிரட்டல் வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.தினகரன் அரசியல் பயணத்துக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே உதவியாக இருப்பவர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன்.
இவ்விரு எம்.எல்.ஏ.க்களும் தகுதியிழந்ததாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டு வழக்கை சந்தித்து வருகின்றனர்.

இருவரும் வியாழக்கிழமை தலைமை செயலகம் வந்தனர்.
அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தடையை மீறி உள்ளே சென்ற இருவரும் முதல்வர் மீது ரூ.1500கோடி ஊழல்புகார் அளித்தனர்.
நெடுஞ்சாலை துறையின் ஒப்பந்தங்கள் அனைத்தும் முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கும் அவர் குடும்பத்துக்கு வேண்டியவர்களுக்கும் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.இந்நிலையில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here