பசிக்காக பலியான பழங்குடி வாலிபர் ! குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!!

திருவனந்தபுரம்: கேரள மாநில வனப்பகுதியான அட்டப்பாடியில் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடியின வாலிபர் மதுவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார் முதல்வர் பினராய்விஜயன்.

பொருட்களை திருடியதாக சந்தேகித்து கடந்த 22ம் தேதி மதுவை வாலிபர்கள் சிலர் பிடித்து அடித்து கொடுமைப்படுத்தினர்.
அவரை போலீசில் ஒப்படைத்தனர். சிகிச்சைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் இறந்தார்.

மதுவை தாக்கியபோது செல்பி எடுத்து தங்கள் பிரதாபத்தை பறைசாற்றிய 17 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்திருந்தார் முதல்வர் பினராய் விஜயன்.
இன்று மதுவின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
மதுவின் தாயார் மல்லிகா, சகோதரி சந்திரிகாவிடம், `குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் உறுதியளித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், ”மது குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைப்பகுதியில் திரியும் மனநலம் பாதித்தோரை பராமரிக்க தனிமையம் செயல்படும்.
பழங்குடியின மக்களுக்கு ரேஷன் அரிசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும்., வேலை வாய்ப்பு உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here