மீண்டும் சூடுபிடிக்கும் காவிரி விவகாரம்!

பெங்களூர்: காவிரி தீர்ப்பு குறித்து ஆலாசிக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி. கர்நாடாகவில் மார்ச் 7ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து 4மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
உசாநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பில், காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்கவும், 6வாரத்துக்குள் காவிரி நீர் மேலாண்மைவாரியம் அமைத்து குடியரசு தலைவர் கண்காணிப்பில் இயங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தீர்ப்பையடுத்து தமிழகத்தில் கடந்த பிப்.22ல் தமிழக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.
பிரதமரை சந்தித்து மேலாண்மை வாரியம் விரைந்து அமைக்க வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டது.இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

 

 

இதற்கிடையே இன்று தொலைபேசியில் திமுக செயல்தலைவரை தொடர்புகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி விவகாரம் குறித்து ஆலோசித்துள்ளார். இருவரும் தலைமை செயலகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here