ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டி!! இந்தியாவுக்கு ஒரு வெள்ளி! 3வெண்கலம்!!

கிர்கிஸ்தான்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிபதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்றுவருகிறது.இதில் மகளிர் ப்ரீ ஸ்டைல் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்தி வீராங்கனை வினேஷ் போகத் அபாரமாக விளையாடினார்.
அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போகத் ஜப்பானின் யுகி ஐரியை எதிர்த்து போட்டியிட்டார். இப்போட்டியில் இருவரும் 4-4 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
இதில் புள்ளிகள் அடிப்படையில் போகத் வெற்றி பெற்று இறதிப்போட்டிக்கு முன்னேறினார்.இறுதிப்போட்டியில் சீனாவின் சூன்லெயை, போகத் எதிர்கொண்டார், ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய போகத், அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சுதாரித்துக்கொண்ட சீன விராங்கனை எஞ்சியிருந்த நிமிடங்களை தனதாக்கிக் கொண்டார். இதில் 3-2 என்ற கணக்கில் சீன வீராங்கனை வெற்றி பெற்றார். வினேஷ் போகத் 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தியாவின் மற்றொரு வீராங்கனை சங்கீதா 59கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்றார்.
இத்தொடரில் இந்திய அணி ஒரு வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here