ஜப்பானில் புதியவகை உயிரினம் கண்டுபிடிப்பு!

டோக்கியோ: ஜப்பானில் மேக்ரோபயோடஸ் ஷோனெய்கஸ் என்ற புதிய வகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுண் பெருக்கி வழியாக மட்டுமே பார்க்க கூடிய ஊர்வனவகையை சேர்ந்த உயிரினம் டர்டிகிரேட் ஆகும்.
1773ல் இவ்வகை உயிரினங்கள் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டன.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான டர்டிகிரேட் உயிரினங்கள் உள்ளன.
ஜப்பானில் மட்டும் 167வகை டர்டிகிரேட்கள் உள்ளன. 168வது வகையாக புதிய டர்டிகிரேட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள சுருவோகா நகரில் கார் நிற்கும் பகுதியில் இவ்வகை புதிய உயிரினங்கள் இருப்பதை போலந்த் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேனியல்டெக் கண்டறிந்தார்.

இந்த உயிரினங்கள் ஆய்வகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டன.
புதிய டர்டிகிரேட் ஷொனாய் மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டதால் அதன் பெயரை எம் ஷொனெய்கஸ் என்று வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here