ஆம்புலன்ஸ் மறுப்பு! ஸ்கூட்டரில் சிகிச்சைக்கு வந்த சிறுமி பலி!!

ரத்லாம்: ஆம்புலன்ஸ் இல்லாததால் தந்தையின் ஸ்கூட்டரில் சிகிச்சைக்குவந்த சிறுமி உயிரிழந்தார்.
இச்சோக சம்பவம் நடந்தது மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லாம் நகரில்.ரத்லாம் நகர் அருகில் உள்ள நந்த்லிடாவை சேர்ந்தவர் ஞானஸ்யாம். இவர் மகள் ஜீஜா.
கடந்த சில தினங்களாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் ஜீஜா.
ரத்லாம் நகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அவர் சேர்க்க உள்ளூர் டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
அதனை ஏற்று ஜீஜாவை ரத்லாம் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவையை அழைத்தனர்.ஆனால் ஜீஜா வசித்துவரும் நந்த்லிடா கிராமம் 30கிமீ அதிகமான தூரத்தில் உள்ளது.
அங்கெல்லாம் ஆம்புலன்ஸ் சேவை தரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நண்பரின் மோட்டார் சைக்கிளை கடன்வாங்கினார் ஞானஸ்யாம்.
அதில் மகளை வைத்து மெதுவாக ஓட்டியவாறே ரத்லாம் வந்தார்.

ஜீஜா சோர்வடைந்த நிலையில் அரைமயக்கத்தில் இருந்தார். அவர் உடலில் குளுகோஸ் ஏற்றப்பட்டது.
குளுகோஸ் பாட்டிலை பிடித்தவாறே ஜீஜாவின் தாய் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்.
துரதிருஷ்டவசமாக அவர்கள் வரும் வழியிலேயே ஜீஜா இறந்தார். ரத்லாம் மாவட்ட அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஜீஜா இறந்ததை உறுதிசெய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here