ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர் சில்மிஷம்!

டெல்லி: அறுவை சிகிச்சை செய்யும்போது டாக்டர் தவறாக நடந்துகொண்டார் என்று இளம்பெண் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.டெல்லியை சேர்ந்த பெண் ஷமீரா(26). குடல்வால் அறுவை சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவெடுத்தனர்.
அதன்படி, மயக்கமருந்து தரப்பட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அரை மயக்க நிலையில் இருந்த அவரை ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர் தவறாக நடந்துகொண்டுள்ளார்.
டாக்டரின் அத்துமீறல் குறித்து நான் உணர்ந்தேன். ஆனால் தெளிவாக அதனை புரிந்துகொள்ளமுடியவில்லை.
ஆபரேஷன் செய்தும் எனக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.

தொடர்ந்து வலிநிவாரணிகளை சாப்பிட்டு வருகிறேன். வேறு வழியில்லாமல் அக்டோபரில் நடந்த சம்பவம் குறித்து தற்போது புகார் செய்துள்ளேன் என்றார்.
இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்த டெல்லி போலீசார் டாக்டரிடம் விசாரணை துவக்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here