வங்கிகளை ஏமாற்றி வெளிநாட்டில் பதுங்குவோர் சொத்து பறிமுதல்!

டெல்லி:பொருளாதார குற்றம் புரிந்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சிறப்புச்சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.வங்கி மோசடி, வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள், கிரிமினல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயங்குவோர், ரூ.100கோடிக்கும் அதிகமாக வங்கி மோசடியில் ஈடுபடுவோர்கள் ஆகியோருக்கு எதிராக புதிய சட்டம் வருகிறது.இவ்வகை குற்றம் புரிந்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை ஏலமிட்டு கடனை திருப்பிச்செலுத்த புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்துக்கு தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் சட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், புதிய சட்ட மசோதா வரும் 5-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தைக்காட்டிலும் இது கடுமையானதாகும்.
இந்த சட்டத்தில் பொருளாதார குற்றம் செய்து தலைமறைவாகஇருந்தால், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும்.

இவ்வகையான சட்டம் கொண்டுவரப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது தெரிவித்திருந்தேன்.
இவ்வாறு அருண்ஜெட்லி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here