எங்கெங்கும் பேனர்கள்! அரசுக்கு நீதிமன்றம் கண்டிப்பு!!

சென்னை:பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளம்பரங்களுக்காக கட்சி பேனர்கள் மற்றும் விளம்பர பேனர்கள் சாலைகளில் வைக்கப்படுகின்றன.இந்த பேனர்கள் பொது மக்கள் நடந்து செல்லும் பாதைகள், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளன.
இதனால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறும் உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் போக்குவரத்து, மக்களுக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்றாமல் காவல்துறை என்ன செய்கிறது.

சாலைகளில் உள்ள பேனர்களை அகற்றாமல் இன்னும் ஏன் அனுமதி தரப்படுகிறது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். பேனர்களை அகற்றி விரிவான அறிக்கையை 5ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.கடந்த வருடம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது முதல்வரை வரவேற்க பேனர் கோவை சாலையில் வைக்கப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த கோவையை சேர்ந்த ரகுபதி சாப்டுவேர் இன்ஜினியர் பேனருக்காக வைக்கப்பட்ட கட்டைகளில் மோதி உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு ஒன்றில் உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here