இருக்கும் வரை எதிர்ப்பேன்! இறந்தபின் மதிப்பேன்!!

சென்னை:இயக்குநர் டி.ராஜேந்தர் லட்சிய திமுக என்ற கட்சி நடத்தி வருகிறார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

28ம் தேதி முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிடுவேன் என்றார்.
இன்று எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாரிசு என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திமுக என்றாகிவிட்டது.
இனி திமுக பாடு.. ஸ்டாலின் பாடு..ஒரு விதத்தில் நான் திமுகவிற்கு தூக்கி எறியப்பட்ட கறிவேப்பிலை! பரவாயில்லை!
தந்தை பெரியாருக்கும் பேரறிஞர் அண்ணாவிற்கும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும், புரட்சி தலைவர் அம்மாவிற்கும் பிள்ளைகள் இல்லை.
இந்த நால்வர் ஆன்மாக்களின் நல்ல கொள்கைகளுக்கு நான் ஒரு தத்து பிள்ளை என்று தெரிவித்துள்ளார் டி.ராஜேந்தர்.

கட்சியின் பெயர்ப்பலகை, லெட்டர்பேடு ஆகியவற்றில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களையும் இடம்பெறச்செய்துள்ளார். இலட்சிய திமுக என்றும் கட்சிப்பெயரை அறிமுகப்படுத்தினார்.
திமுகவில் முக்கியப்பிரமுகராக வலம்வந்த டி.ராஜேந்தர் அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here