இரு பிரபலங்கள் காலமாகிவிட்டனர்!

சென்னை: தமிழகத்தை சேர்ந்த இரு பிரபலங்கள் இன்று காலமாகிவிட்டனர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வதுமடாதிபதியாக பொறுப்பு வகித்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்(82) காலமானார்.மூச்சுத்திணறல் பிரச்சனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சங்கரமடம் திரும்பி ஓய்வெடுத்து வந்தார்.

இன்று காலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மடத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
பிரதமர், முதல்வர், பல்வேறு அரசியல் கட்சிபிரமுகர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தின் சட்டமேதையாக விளங்கிய ரத்தினவேல் பாண்டியன் காலமானார்.
1929ல் நெல்லை மாவட்டத்தில் பிறந்த இவர் 1954ல் சென்னை சட்டக்கல்லூரியில் பட்டம் முடித்தார்.
கே.நாராயணசாமி முதலியாரிடம் ஜூனியராக பணியாற்றினார்.1974ல் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 1988முதல் 1994வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்ரார்.
2007ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார்.
ரத்தினவேல் பாண்டியன் மகன் சுப்பையா தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here