காற்றில் உந்தன் கீதம்….காணாத ஒன்றை தேடுதே…..

மும்பை: மும்பையில் வில்லிபார்லியில் உள்ள மின் மயானத்தில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர்.
மூவர்ண கொடிபோர்த்திய ஸ்ரீதேவி உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மாநில அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
ஸ்ரீதேவி முகத்தை கடைசியாக பார்க்க முடிவில்லையே என அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்கள் 50 அடி தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் வருத்தம் அடைந்தனர்.

இறுதி ஊர்வல வாகனத்தில் கொண்டுசெல்லப்படும் ஸ்ரீதேவி முகத்தையும் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய சினிமா நட்சத்திரங்கள் ஸ்ரீதேவி இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். இறுதிச் சடங்கு நடப்பதற்கு முன் பிரபல நட்சத்திரங்கள் ஸ்ரீதேவி இல்லத்துக்கே சென்று அஞ்சலி செலுத்தினர். பலர் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த மும்பை ஸ்போர்ட்ஸ் க்ளப்புக்கு வந்தனர்.திருமண நிகழ்ச்சிக்காக பங்கேற்பதாக அவரது கணவருடன் ஸ்ரீதேவி துபாய் சென்றிருந்தார். அங்கு இரவு விருந்தில் பங்கேற்று மது அருந்தியாக கூறப்படுகிறது. குளியல் அறைக்கு ஸ்ரீதேவி இறந்து கிடந்தது சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
துபாய் போலீசார் இதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து வழக்கை முடித்தனர்.குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட உடல் செவ்வாய்க்கிழமை இரவு 9மணியளவில் மும்பை எடுத்துவரப்பட்டது.
ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் இருந்து அவரது ரசிகர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
மும்பையில் அதிகம்பேர் பங்கேற்ற இறுதி ஊர்வல நிகழ்ச்சி என்று போலீசார் தெரிவித்தனர்.

ஸ்ரீதேவியின் பிறந்த ஊரான சிவகாசியில் பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here