டிரம்ப் கோரிக்கை ஏற்பு! ஹார்லி டேவிட்சன் வாகனங்களுக்கு வரி குறைப்பு!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை ஏற்று அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பைக்குகளுக்கு 50சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் உள்நாட்டு தொழில் வளர்ச்சி, அமெரிக்க பொருட்கள் ஏற்றுமதியில் தீவிர கவனம் செலுத்திவருகிறார்.  எல்லா வர்த்தகங்களிலும் அமெரிக்கா நம்பர் 1 ஆக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்.இதற்காக பல்வேறு சலுகைகள் உள்நாட்டினருக்கும், வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் மீதும் கெடுபிடி அதிகரிக்கிறது.அமெரிக்காவில் தயாராகும் பிரபல ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் மீது இந்தியாவில் 120சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது.   பின்னர் அவ்வரி 100சதவீதம் என குறைக்கப்பட்டது.
இதுகுறித்து தெரியவந்த டிரம்ப் கொதித்தெழுந்தார். இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பைக்குகளுக்கு வரி சலுகை தருகிறோம். அவர்கள் 100சதவீதம் நமது பைக்குகள் மீது வரி விதிப்பது ஏற்க முடியாது.                                           பிரதமர் மோடி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அங்கிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள் மீது வரிவிதிக்க வேண்டிவரும் என்று எச்சரித்தார். 

இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்க வாகனங்கள் மீதான வரி 50% என குறைக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதியாகும் வாகனங்கள் மீது 120%வரி விதிக்கப்படுகிறது. உதிரிபாகங்களை மட்டும் இறக்குமதி செய்து இந்தியாவில் வாகனம் தயாரிப்போர் மீது 60%வரை வரிவிதிக்கப்படுகிறது.  உள்நாட்டிலேயே உதிரிபாகம் வாங்கி வாகனம் தயாரித்தால் வரி விலக்கு உள்ளிட்ட பல சலுகைகள் இந்தியா அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here