Connect with us

india

கார்த்தி சிதம்பரம் கைது ஏன்?

Published

on

சென்னை:நிதி மோசடி செய்ததாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
ஒரு நாள் அவரிடம் விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது.2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து முதலீடு பெற அனுமதி பெறமுடியவில்லை.
ஆனால், கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக அனுமதி பெற்றுத் தந்துள்ளார்.

இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது.
மீடியா நிறுவனத்தின் பங்குதாரர் இந்திராணி முகர்ஜி சிபிஐ போலீசிடம் இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தின.
நீதிமன்றம் அனுமதியுடன் லண்டன் சென்று திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைதுசெய்து டெல்லி அழைத்து சென்றனர்.

அங்கு ரகசிய இடத்தில்வைத்து விசாரித்தனர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 15நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர்.
நீதிமன்றம் ஒருநாள் விசாரணைக்கு அனுமதி அளித்தது.
தனது கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator