ஸ்ரீதேவி உடல் மும்பை வந்தது!

மும்பை: துபாயில் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது.
துபாயில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார் ஸ்ரீதேவி.
அங்கு எதிர்பாரத விதமாக திடீரென மரணம் அடைந்தார்.


மாரடைப்பால் ஸ்ரீதேவி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.
உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை.
மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது.


இதனால் ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
போலீசார் அனைத்து கோணங்களிலும் தீவிரவிசாரணை நடத்தி உடலை இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

உடல் பதப்படுத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு சுமார் 9.35 மணியளவில் மும்பை கொண்டு வரப்பட்டது. மும்பை அந்தேரியில் உள்ள அவர் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.


நாளை அதிகாலை அந்த பகுதியில் உள்ள போனி கபூருக்கு சொந்தமான செலிபிரே‌ஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு மதியம் 12.30 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.


பிற்பகல் 3.30 மணிக்கு, மும்பை விலேபார்லேவில் உள்ள மின் மயானத்தில் ஸ்ரீதேவி உடல் தகனம் செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here