ரிலையன்ஸ் ஜியோவுக்கு சர்வதேச விருது!

மும்பை:ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சிறந்த தொலைத்தொடர்பு சேவைக்காக சர்வதேச விருது பெற்றுள்ளது.பார்சிலோனா நகரில் சர்வதேச மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது.
அதில் சிறந்த நுகர்வோர் சேவைக்கான சர்வதேச விருது ஜியோவுக்கும் அதன் தொழில்நுட்ப பார்ட்னர் சிஸ்கோவுக்கும் சேர்த்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோடிவி ஆப் சிறந்த மொபைல் விடியோ கண்டெண்ட் ஆப் என தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா கூறுகையில், சர்வதேச மொபைல் மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள விருதுகள் மிகவும் பெருமைக்குரியன.

இந்தியாவில் உலகத்தரம்வாய்ந்த சேவைகள் கிடைத்து வருவதற்கான சான்றாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.
5ஜி சேவையை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது. அச்சேவையிலும் இதுபோன்று விருதுகள் குவிப்போம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here