நள்ளிரவில் மின்கம்பத்தில் ஏறி ரகளை செய்தவர் கைது!

ஈரோடு: நள்ளிரவில் மின் கம்பத்தில் ஏறிநின்று அட்டகாசம் செய்தவர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
பெங்களூருவை சேர்ந்த எலக்டிரிஷன் அய்ரின்.இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரில் இருந்து பொள்ளாச்சியில் உள்ள தனது மனைவியை பார்க்க பேருந்தில் சென்றுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பேருந்து வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்ரின் திடீரென்று தன்னை யாரோ கொல்ல வருவதாக அலறினார்.
அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி மேட்டூர் சாலையில் ஓடினார்.
பொதுமக்கள் அவனை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் பாதுகாப்பில் இருந்த அவர் திடீரென்று அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறினார். உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்கம்பிகள் மீது நடந்து மக்களை பீதியூட்டினார் அய்ரின்.
2மணிநேர போராட்டத்துக்குப்பின் அவர்பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here