Connect with us

Cinema

அரசியலில் எதிர்துருவங்கள்! சினிமாவில் இணைகின்றன!!

Published

on

சென்னை: அரசியலில் இரு துருவங்களாக உள்ள குஷ்பு, சீமான் திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது.
இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவியாக ரோஹினி நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின், எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
விஜய் ஆண்டனியும் சமூகபோராளியாக படத்தில் நடிக்கிறார்.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு, நாம்தமிழர் ஒருங்கிணப்பாளர் சீமான் ஆகியோரும் டிராபிக் ராமசாமி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
இந்த படத்தை விஜய் விக்ரம் என்பவர் இயக்கி வருகிறார். ஈரோடு மோகன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator