ஸ்டெம்செல் தானம்! புற்றுநோய் பாதித்த பெண்ணை காப்பாற்றிய வாலிபர்!

கோவை:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்த ஸ்டெம்செல்களை தானமாகக் கொடுத்து, காப்பாற்றியுள்ளார் கோவை வாலிபர்.டெல்லியை சேர்ந்தவர் கரிமா சரஸ்வத்(37). தனியார் அலுவலகத்தில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
2016ல் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கரிமாவுக்கு ஸ்டெம்செல் சிகிச்சை அளித்தால் உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கோவை மசானிக் மருத்துவமனையில் ஸ்டெம்செல் தானம் செய்வோரது விபரங்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
அதில் குருமூர்த்தி(27) என்ற மெக்கானிக் ரத்தத்தில் இருந்து பெறப்பட்ட ஸ்டெம்செல் உதவியுடன் கரிமாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது கரிமா உடல்நலம் நன்கு தேறியுள்ளார். அவர் குருமூர்த்தியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இருவர் இடையேயான சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்தது.தனது சகோதரி ரத்தப்புற்றுநோயால் இறந்ததால் ஸ்டெம்செல் தானம் செய்ய குருமூர்த்தி பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here