பி.எஸ்.என்.எல். – நோக்கியா கைகோர்ப்பு!

மும்பை: மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவுடன் இணைந்து 4ஜி சேவை வழங்கவுள்ளது.

இரு நிறுவனங்களும் இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப்பின் 4ஜி சேவை கட்டணங்கள் வெகுவாக குறைந்துவிட்டன.இந்நிலையில், செல்போன் மற்றும் 4ஜி சேவை ஆகியவற்றை இணைந்துவழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் 5ஜி சேவையையும் வழங்கவுள்ளன.
முதற்கட்டமாக, 10தொலைதொடர்பு வட்டங்களில் இச்சேவை அறிமுகமாகிறது.
இதனால் 3.8கோடி வாடிக்கையாளர்கள் பயனடைய உள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 10 வட்டாரங்களில் 4ஜி நெட்வொர்க் சேவை வழங்குவதற்காக, நோக்கியா நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here