கணவனை கவனிக்க விவாகரத்து செய்த பெண்?!

சீனா: கணவனை நன்றாக கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக அவரை விவகாரத்து செய்துள்ளார் ஒரு பெண்.
இந்த ஆச்சர்ய நிகழ்ச்சி நடந்துள்ளது சீனாவில்.
அந்நாட்டில் உள்ள ஷாங்சி மாகாணத்தில் உள்ள அன்கங் நகரை சேர்ந்தவர் சுசிகன். இவரது மனைவி சிசிபிங்.இருவருக்கும் 1996ம் ஆண்டு திருமண்டம் நடந்தது. இத்தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார்.
2002ல் சுசுகன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.
கடந்த 15 ஆண்டுகளாக அவர் படுக்கையில்தான் உள்ளார். தனி ஒரு பெண்ணாக சிசிபிங் கணவரை கவனிப்பதில் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கணவர் ஒப்புதலுடன் அவரை விவாகரத்து செய்தார்.
கணவருக்கு நெருங்கிய நண்பர் லியுசங்கியை 2வது திருமணம் செய்துகொண்டார் சிசிபிங்.
இத்தம்பதிக்கும் தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

லியுசங்கியும், சிசிபிங்கும் நோயால் பாதிக்கப்பட்ட சுசுகனை மிகவும் நன்றாக கவனித்துக்கொள்கின்றனர்.
இதனால் அவர் உடல்நலம் தேறிவருகிறார். விரைவில் அவர் நடப்பதற்கு பயிற்சி எடுக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here