டானிக் பாட்டிலில் மண்புழு! 2வயது குழந்தை பாதிப்பு!!

கோழிக்கோடு: குழந்தைக்கு கொடுத்துவந்த டானிக்கில் மண்புழு இருந்ததை பார்த்த தம்பதி அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக பிரபல மருந்து கம்பெனி மீது புகார் அளித்தனர்.

கேரளமாநிலம் கோழிக்கோடு நகரத்தை அடுத்துள்ள வட்டொளியை சேர்ந்தவர் ஆசிஸ். இவர் இரண்டு வயது மகள் உடல் இளைத்து காணப்பட்டாள்.

டாக்டர்கள் அச்சிறுமிக்கு டானிக் ஒன்றை பரிந்துரைத்தனர். அதனை தினமும் இரண்டுவேளை ஆசிஸ் கொடுத்து வந்தார். 

டானிக் சாப்பிட்ட குழந்தை உடனடியாக வாந்தி எடுத்து மூச்சிரைப்பு ஏற்பட்டு வந்தது.

இதனை கவனித்த ஆசிஸ் மருந்து காலாவதியானதாக இருக்குமா என்று சந்தேகம் கொண்டு மருந்து பாட்டிலை கவனித்தார். அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மண்புழு பாட்டிலுக்குள் இருந்தது. உடனடியாக மருந்துக்கடைக்காரரிடம் மற்றும் போலீசில் புகார் செய்தார்.

மருந்து தயரிப்பு நிறுவனம் மீது புகார் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here