இந்திய மாணவியின் இரட்டை சாதனை!

துபாய்: ஒரே மேடையில் இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் இந்தியாவை சேர்ந்த பாடகி சுசிதா சதீஷ்(12).
துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவர் சுசிதா.
இவரது தந்தை டாக்டராக துபாயில் பணியாற்றுகிறார்.சிறுவயதில் இருந்தே ஞாபகசக்தி பெயர்பெற்ற சுசிதா, உலகின் ஆறுகள், முக்கிய மொழிகள் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து கடகடவென கூறுவார்.
கடந்த ஜனவரிமாதம் இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன் 102 மொழிகளில் 6.15மணிநேரம் தொடர்ந்து பாடி சாதனை படைத்துள்ளார்.

அதிக மொழிகளில் பாடல் பாடிய தனிநபர், அதிகநேரம் அதிகமொழிகளில் பாடியவர் என்ற இரட்டை சாதனைகளை சுசிதா படைத்துள்ளார்.
இதற்காக கின்னஸ் புத்தகத்தில் அவர் பெயர் இடம்பெற உள்ளது.
சிறுவயதில் இருந்தே தனக்கு சங்கீதம் பிடிக்கும் என்றும் 4வயதில் இருந்தே கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி போன்றவற்றை கற்றுவருவதாகவும் சுசிதா சதீஷ் தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த தந்தையின் தோழி ஒருவர் வீட்டுக்குவந்திருந்தபோது ஜப்பானிய பாடலை பாடினார். அது மிகவும் பிடித்திருந்தது. அந்த பாடலை படிப்பதற்கு அவரிடம் பயிற்சி பெற்றேன்.
தொடர்ந்து பிறமொழி பாடல்கள் மீது ஆர்வம் வந்து தற்போது 102 மொழிகளின் பாடல்களில் தேர்ச்சிபெற்றுள்ளேன். மேலும் பல மொழிகளில் படிக்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளேன் என தெரிவித்தார் சுசிதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here