ஓவைசி உடம்பில் ஜின்னாவின் ரத்தம்! மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!!

டெல்லி: ஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி போன்றவர்களின் உடம்பில் முகமது அலி ஜின்னாவின் ரத்தம் ஓடுகிறது என்று மத்திய அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் அளித்தபேட்டி:
முஸ்லிம்கள் புனித ஸ்தலமாக மெக்காவும், மெதினாவும் இருக்கிறது.
ஆதலால் அவர்கள் அங்கே செல்லட்டும். இந்துக்கள் எங்கே செல்வார்கள்?
பாகிஸ்தானில் சென்று ராமர் கோயில் கட்டமுடியுமா?ஒவைசி போன்றவர்களின் உடம்பில் முகமது அலி ஜின்னாவின் ரத்தம் ஓடுகிறது.
ஜின்னாவின் ஜீன் இன்னும் வாழ்ந்து வருகிறது.
இதுபோன்ற மனிதர்கள் எல்லாம், நாட்டை துண்டாட நினைப்பவர்கள்.
இந்தியாவில் வாழும் அனைவருமே இந்துக்கள்தான்.
கடவுள் ராமரின் பிள்ளைகள்தான் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள்.நமக்குள் வெவ்வேறு விதமான வழிபாடுகள் இருந்தாலும், அனைவரும் ஒரே மூதாதையரை தொடர்ந்து வந்தவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அயோத்தி வழக்கு தொடர்பாக டெல்லியில் ஓவைசி பேசுகையில், மதநம்பிக்கை அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்காது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக ராமர்கோவில் வழக்கு தீர்ப்பு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here