ஏழை பெண்களுக்கு இலவச அழகு சிகிச்சை திட்டம்! தமிழக அரசு அறிமுகம்!!

சென்னை: இந்தியாவில் மட்டுமல்ல உலகில் முதன்முறையாக பெண்களின் அழகுக்காக இலவச சிகிச்சை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
ஏழை பெண்களுக்கு இலவசமாக மார்பக அழகு சிகிச்சை திட்டம் தொடங்கப்பட உள்ளது.

ஏழைகளுக்கு உணவு, குடிநீர், உடை, குடிநீர் ஆகியவை அரசால் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்திட்டங்களின் கீழ் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது அதன் நீட்சியாக அழகு சிகிச்சை திட்டம் அமலாக்கப்பட உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டம் இந்தியாவில் முன்னோடி திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இச்சிகிச்சைக்கான பணத்தை காப்பீட்டு நிறுவனங்களிடம் ஈடுசெய்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள தலைமை மருத்துவமனையில் முதற்கட்டமாக அழகு சிகிச்சைகள் தொடங்கப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

தமிழகத்தை சேர்ந்த ஏழைப்பெண்களில் 50சதவீதம் பேர் உடல்தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களாம். எனவே, அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இத்திட்டம் அறிமுகமாகிறது.இத்திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அனுமதிக்கப்படுவார்கள்.
மார்பக தோற்றத்தை அதிகரிப்பதற்காக மட்டுமின்றி அதனை குறைக்கவும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

கேன்சர் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை பெண்களுக்கு இதுபோன்ற திட்டம் வரப்பிரசாதமாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here