கோவில் விழாவில் யானை அட்டகாசம்! சாமர்த்தியமாக உயிர்தப்பினார் பாகன்!!

கோட்டயம்: கோவில் விழாவில் பங்கேற்ற யானைக்கு திடீரென மதம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள எட்டுமனூர் மகாதேவ் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பூஜையில் பங்கேற்க யானைகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
சுவாமி ஊர்வலத்தின்போது யானைகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக வரவழைக்கப்பட்டன.
இதனால் குட்டியானை ஒன்று கோபமடைந்தது.பாகனின் சொல்லை கேட்காமல் அலைபாய்ந்தது. யானைக்கு மதம் பிடித்துள்ளது தெரியவந்த பாகன் சாமர்த்தியமாக கோவில் விமானத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை பிடித்து கோவில் மாடத்தில் ஏறி உயிர் தப்பினார்.

இதனால் கட்டுப்பாடு இழந்த யானை கோவில் வளாகத்தில் அங்குமிங்கும் ஓடியது.
அங்கிருந்த விளக்குகள், தூண்கள் மீது முட்டியது.
சிறிதுநேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.
யானை திடீரென அட்டகாசம் செய்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here