மணமகனுக்கு வழுக்கை தலை! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

பிகார்:மணமேடையில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையின் வழுக்கை தலையை பார்த்து திருமணத்துக்கு மறுத்துள்ளார் ஒருபெண்.
பிகார் மாநிலம் சுகாலி கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் ரவிக்குமார்.

டெல்லியில் அறுவை சிகிச்சை நிபுணராக புகழ்பெற்றுள்ள இவர் திருமணம் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருந்தது.
இந்நிலையில் சொந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை இவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவானது.
கடந்த 18ம் தேதி திருமணத்தன்று காரில் வந்து இறங்கினார் சிவக்குமார். அப்போது பாரம்பரிய தொப்பிவைத்து அசத்தலாக வந்தார். அவரைப்பார்த்து வெட்கப்பட்டார் மணகமகள்.

ஆனால், மணமேடையில் அவரைப்பார்த்த மணப்பெண் துணுக்குற்றார்.
வருங்கால கணவர் தலையில் முடியில்லாததை பார்த்து கதறி அழுதார். திருமணத்துக்கு மறுத்தார்.
இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தார்.அவர்கள் இருவரும் சேர்ந்து அக்கிராமத்தை சேர்ந்த காய்கறிவியாபாரியின் மகள் நேகாவை சிவக்குமாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர்.
அதே தினத்தில் சிவக்குமாருக்கும், நேகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் தற்போது டெல்லியில் குடியேறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here