மே மாதம் சட்டமன்ற தேர்தல்?!

சென்னை: தமிழகத்தில் மே மாதம் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அதிமுக அரசு மைனாரிட்டி அரசாக உள்ளது.  போதிய உறுப்பினர் பலம் இல்லாததால்  ஆட்சி தொடரக்கூடாது என்று எதிர்க்கட்சிகள், தினகரன் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு மார்ச் மாதம் முதல்வாரத்தில் வெளீயாக வாய்ப்பு உள்ளது.

இத்தீர்ப்பினால் ஆட்சிக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும். இல்லாவிடில் தினகரன் தனது ஆதரவாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து ஆட்சியை கவிழ்ப்பார்.இதனால் மே மாதம் தமிழகத்தில் பேரவை தேர்தல் நடைபெற அதிகவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தினகரன் தன்னுடன் கைகோர்க்கும் நபர்களுக்கு அமைச்சரவையில் இடம் உள்ளிட்ட பல சலுகைகளை தருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, அதிமுக தரப்பில் இருந்து மேலும் பலர் பிரபுவை தொடர்ந்து தினகரனை ஆதரிக்க ஆலோசித்து வருகின்றனர்.

இதற்கிடையே, புதுக்கோட்டை வந்திருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் அளித்த பேட்டியில், தினகரனுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். அரசியலில் அவர்தான் சூப்பர்ஸ்டார்.தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு முதல்வராக மாட்டார். தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று முதல்வராவார். இவ்வாறு திவாகரன் தெரிவித்துள்ளார்.
கமல், ரஜினி ஆகியோர் தங்கள் கட்சிகளை இப்போதுதான் துவக்கி உள்ளனர். அவர்கள் அரசியலில் நிலைகொள்வதற்கே சற்று காலம் பிடிக்கும். அவர்கள் வாகுவங்கியை உருவாக்குவதற்குள் தேர்தலை சந்தித்தால் அரிதார அரசியலை பலவீனப்படுத்த முடியும் என்று கணக்கிடுகிறார் தினகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here