ஸ்ரீதேவி உடல் மும்பை வர தாமதம் ஏன்?

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவருவதில் தாமதம் ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.


வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சாப்பிட்டபின் விடுதி அறைக்கு திரும்பினார்.
துபாய் நேரப்படி நள்ளிரவு 11.30மணியளவில் பாத்ரூம் சென்றுள்ளார்.
அங்கு மயங்கி விழுந்துள்ளார்.
சுமார் அரைமணிநேரம் கழிந்தபின்னரே ஸ்ரீதேவி மயங்கிய விபரம் தெரியவந்துள்ளது.
ஓட்டல் பணியாளர் அழைக்கப்பட்டுள்ளார். பெண் உதவியாளர் ஒருவருடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.


டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதேவியின் உடல் அல்குவாசிஸ் என்ற இடத்தில் உள்ள தடயவியல் அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு உடல் பரிசோதனை நடைபெற்றது.
அவர் உடலின் வேறுபாகங்களில் காயம் ஏதும் உள்ளதா?
என்ன உணவு கடைசியாக சாப்பிட்டார்?
மரணம் இயற்கையாக நடந்ததா?
என்ற கோணங்களில் உடல்பரிசோதனை செய்யப்பட்டது.
உடலின் பாகங்களை அறுத்து சோதனை செய்யப்படும் போஸ்ட் மார்டம் ஸ்ரீதேவிக்கு செய்யப்படவில்லை.


துபாய் சட்டப்படி, வெளிநாட்டினர் ஒருவர் இறந்தால் அவர் உடல்பரிசோதனை அளிக்க 24மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படும்.
அதன்படி இந்தியநேரப்படி இன்று நள்ளிரவு 12மணிக்குத்தான் பரிசோதனை அறிக்கை கிடைக்கும்.
பணிகளை விரைவுபடுத்துமாறு தூதரக அதிகாரிகள் துபாய் அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரித்துள்ளனர்.
அவர்களது விசாரணையும் ஸ்ரீதேவி இயற்கையாக மரணமடைந்தார் என்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.
இந்த இரு அறிக்கைகளும் ஒத்துப்போகின்றன என்பது உறுதிசெய்யப்பட்டபின்னர் உடலை பதனப்படுத்த முஹைசனா மருத்துவ மையத்துக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படும். அதன் பின்னர் சுமார் 2மணிநேரம் எடுத்துக்கொள்ளப்படும்.

பின்னர் தனி விமானம் மூலம் ஸ்ரீதேவி உடல் மும்பைக்கு எடுத்துவரப்படும்.
8மணி நிலவரப்படி, உடல் பரிசோதனை அறிக்கையும், போலீஸ் விசாரணை அறிக்கையும் ஒப்பிடும் பணி நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here