சம்பளத்தை செட்டில் பண்ணுங்க கமல்!

சென்னை: நடிகர் கமலஹாசன் தனக்கு சம்பளப்பணம் பாக்கிவைத்துள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார் நடிகை கவுதமி.
கமலஹாசனும், கவுதமியும் பத்தாண்டுகள் ஒன்றாக வசித்து பின்னர் 2016ல் பிரிந்துவிட்டனர்.

கவுதமி தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இந்த முடிவெடுத்துள்ளார்.
தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமலுடன் கவுதமி இணைந்துசெயல்படுவார்.
இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்துவாழ உள்ளனர் என்று செய்திகள் வெளியாகின.
இதனை கவுதமி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது.
2016-ம் ஆண்டில் பிரிந்து வந்த பிறகு நான் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த விஸ்வரூபம், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றினேன்.

ஆனால், அதற்கு தர வேண்டிய சம்பளம் இன்னும் முழுமையாக தரப்படவில்லை.
இது சம்பந்தமாக நான் பல தடவை நினைவுபடுத்தி தகவல் அனுப்பி இருக்கிறேன். ஆனாலும், எனக்கு தர வேண்டிய பணத்தை எனக்கு செட்டில் செய்யவில்லை.
இவ்வாறு கவுதமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here