எஜமானிக்கு பளார் கொடுத்த பூனை!

மாஸ்கோ: செல்பி எடுக்க அழைத்த எஜமானியின் கன்னத்தில் அடிக்கும் பூனையின் விடியோ இணையத்தில் பிரபலமாகி வருகிறது.ரஷ்யாவில் உள்ள யாகுத்ஸ்க் நகரில் வசித்து வருபவர் அஹ்லினா(23).
இவர் வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.
வெள்ளை நிற பூனையுடன் செல்பி எடுத்து முகநூலில் வெளியிட திட்டமிட்டார்.
இதற்காக படுத்துக்கொண்டு செல்போனை சரியாக பிடித்துக்கொண்டு பூனையை விசிலடித்து அழைத்தார்.வித்தியாசமாக தன்னை எஜமானி அழைப்பதால் துணுக்குற்ற பூனை மெதுவாக நடந்துவந்தது.
அஹ்லினா முகத்தை கூர்ந்து நோக்கிய பூனை அவர் படமெடுப்பதற்குள் அவர் கன்னத்தில் அறைந்துவிட்டு சென்றது.

இந்த விடியோ கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்றாலும் தற்போது இணையவாசிகளால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here