நடிகை ஸ்ரீதேவி மறைந்தார்!

மும்பை: இந்தியாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி(54) துபாயில் நேற்று காலமானார்.
அவர் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாளை திங்கட்கிழமை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
நடிகரும், ஸ்ரீதேவியின் உறவினருமான மோகித்வர்மா திருமண நிகழ்ச்சி துபாயில் நடந்தது.இதற்காக அவர் கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார்.
அங்கு நள்ளிரவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு வந்துள்ளது. சிகிச்சைக்கு செல்லும் வழியில் அவர் இறந்துள்ளார்.

நடிகைக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலுக்கு பிரசித்திபெற்ற சிவகாசி.

4வயது முதல் நடிக்க துவங்கிய ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
துணைவன் படத்தில் குழந்தை முருகனாக தமிழில் தனது திரைவாழ்க்கையை துவங்கிய இவர் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், 2012ஆம் ஆண்டு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனார்.தொடர்ந்து விஜய்யின் புலி படத்திலும், அம்மாவின் பெருமையை பேசும் விதமாக அவர் கடைசியாக நடித்து வெளிவந்த ‘மாம்’ திரைப்படத்திலும் நடித்தார். இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீதேவியின் மறைவு திரையுலத்தினருக்கும், அவரது ரசிகர்கள், குடும்பத்தினருக்கு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.நடிகை மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி,   ரஜினி, கமல், மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here