அப்பாவி மகனை ஏன் கொன்றார்கள்? தாய் கதறல்!

திருவனந்தபுரம்: என் அப்பாவிப்பிள்ளையை ஏன் அடித்து கொன்றீர்கள் என்று ஒரு தாய் கதறும் விடியோ பார்ப்பவர்கள் மனதை உருக்கிவருகிறது.கேரளாவில் உள்ள அட்டப்பாடி வனப்பகுதியை சேர்ந்தது கடுகுமனை கிராமம்.
இங்குள்ள மல்லன் – ஓமனா தம்பதியினரின் மகன் மது(35).
மனநலம் பாதிக்கப்பட்ட இவர் அடிக்கடி வனப்பகுதிக்கு செல்வது வழக்கம்.
அங்கு சுற்றுலா வந்த இளைஞர் கும்பல் மது திருடன் என்று சந்தேகித்தது.

அவரை கட்டிவைத்து அடித்தது. மதுவுடன் செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்டு போலீசில் ஒப்படைத்து சென்றது.
போலீசார் மதுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
இவ்விபரம் தெரியவந்த மதுவின் உறவினர்கள் கொதித்தெழுந்தனர்.

மதுவின் தாயார் ஓமனா என் அப்பாவி பையனை கொன்றுவிட்டார்களே என கதறினார்.
போலீசார் அக்குடும்பத்தினரை சமாதானப்படுத்தி மதுவின் உடலை வாங்கவைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 15பேர்மீது வழக்குப்பதிவுசெய்தனர். 7பேரை கைது செய்துள்ளனர்.மிருகத்தனமான இச்சம்பவத்தை கண்டித்து முதல்வர் பினராயி விஜயன், நடிகர் மம்முட்டி முகநூல்பதிவுகள் இட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here