ஆந்திரா சென்ற தமிழக தொழிலாளர்கள் மாயம்!

சென்னை: தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் ஆந்திரா சென்றுள்ள சுமார் 64 கூலி தொழிலாளர்கள் என்னவாயினர் என்று மர்மம் நீடித்து வருகிறது.
சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து கூலி தொழிலாளர்கள் 70பேர் லாரியில் ஆந்திராவுக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.அவர்கள் போலீஸ் வாகன சோதனையில் சிக்கினர். கைது நடவடிக்கையை தவிர்க்க லாரியில் இருந்து பலர் குதித்தோடி தப்பினர்.
அவர்களில் ஐந்துபேர் கடப்பா ஏரியில் மூழ்கி இறந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர்.

மற்றவர்கள் நிலை என்னவென்பது குறித்து மர்மமாக உள்ளது.
இதற்கிடையே, நெல்லூர் மாவட்டத்தில் செம்மரக்கடத்தல் சம்பவம் தொடர்பாக 20தமிழர்கள் கைதாகி உள்ளனர்.பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஆந்திராவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் செம்மரக்கடத்தல் சம்பவங்களுக்கு தொடர்பு இல்லாதவர்கள்.

விசாரணை என்ற பெயரில் ஆந்திரபோலீசார் தமிழகம் வந்து அவர்களை அழைத்துசென்றனர்.
ஆந்திர சிறைகளில் உள்ள சுமார் 3ஆயிரம் அப்பாவி தமிழர்களை மீட்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here