டிவி நிகழ்ச்சியில் சிறுமியிடம் வரம்புமீறிய பாடகர்!

டெல்லி: டிவி நிகழ்ச்சி ஒன்றில் சிறுமியிடம் வரம்புமீறி நடந்துகொண்டதாக பிரபலபாடகர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உச்சநீதிமன்றத்தில் வக்கீல் ருனாபுயன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில், இந்திய குழந்தைகளின் குரல் எனப்படும் டிவி நிகழ்ச்சியில் நடுவராக பின்னணி பாடகர் பபூன் மெகந்தா பணியாற்றுகிறார்.
பபூன் என்று சினிமா வட்டாரத்தில் இவர் அழைக்கப்படுகிறார்.சமீபத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய ஒரு சிறுமியின் முகத்தில் வண்ணக்கலவையால் பூசினார். பின் அச்சிறுமியின் உதட்டில் முத்தமிட்டுள்ளார்.
தனது குழுவினரிடம் நல்லாயிருக்கிறதா? என்று அவர் நிகழ்ச்சியில் கேட்டுள்ளார்.
இந்த விடியோ பேஸ்புக்கிலும் லைவாக ஒளிபரப்பானது.

பாடகரின் இச்செயல் பாலியல் துன்புறுத்தலுக்கு நிகரானது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு, பாடகர் பபூன் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.டிவி நிறுவனத்தின் உரிமையின்றி விடியோ திருடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து அச்சிறுமியின் தந்தையார் பிரச்சனை செய்துவிடாதீர்கள். இந்நிகழ்வை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்று மீடியாக்களிடம் கோரியுள்ளார்.
ஆனால், விளம்பர வெளிச்சத்துக்காக இதுபோன்று வழக்கு போடப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here