தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு!

சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு  சென்னையில் தினகரனை சந்தித்தார். அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைந்தபின் தினகரன், சசிகலா ஓரங்கட்டப்பட்டனர்.

தினகரனுக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்களது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டு அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

தன்னால் தகுதிநீக்கத்தை சந்தித்த 18பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். தகுதிநீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் அதனைத்தொடர்ந்து எடப்பாடி அரசு கவிழும். அல்லது கலைக்கவேண்டிவரும்.அச்சூழ்நிலையை நமக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை தொடரலாம் என்று தினகரன் கணக்கு போடுகிறார்.                                                                                     இதனால் தனது எம்.எல்.ஏக்கள் ஆதரவை சத்தமின்றி அதிகரித்துவருகிறார்.

இந்நிலையில், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், அதிமுக சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற கருணாஸ் ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் பலர் ஸ்லீப்பர் செல்களாக எடப்பாடி அணியில் தொடர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைகள் மதிக்கப்படுவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.    தினகரன் அணியினர் அரசு பொறுப்பு ஏற்கும் நிலை ஏற்பட்டால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில் பிரபுவை போன்று மேலும் 7பேர் கட்சிதாவ தயாராக உள்ளது தெரியவந்துள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here