திருமணத்தில் வெடிகுண்டு பரிசு! குண்டுவெடித்து மணமகன் பலி!!

ஒடிசா:திருமண தம்பதிக்கு பரிசாக வெடிகுண்டு அளிக்கப்பட்டது. குண்டு வெடித்ததில் மாப்பிள்ளை இறந்தார்.ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ இவருக்கும் ரீமா சாஹூவுக்கும் கடந்த 18 ம் தேதி திருமணம் நடைபெற்றது.
21-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுமண தம்பதியினருக்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்தன.
வீட்டுக்குவந்த தம்பதியினர் பரிசு பொருட்களை ஆவலுடன் பிரித்துப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒருபார்சல் திடீரென்று வெடித்தது. அதில் சேகர், அவரது பாட்டி இறந்தனர்.
மணமகள் படுகாயமுற்று சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் இருவர் காயமுற்று சிகிச்சை பெற்று திரும்பினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here