எறும்புகள் காயம் எப்படி குணமாகிறது?

லண்டன்: எறும்புகளுக்கு காயம் ஏற்பட்டால் என்ன செய்கின்றன என்ற விநோத ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதன் விபரத்தை வெளியிட்டுள்ளது. ராயல் சொசைட்டி ஆராய்ச்சி மையம்.
லண்டனில் இயங்கிவரும் இந்த ஆராய்ச்சி மையம் வனப்பகுதியில் உள்ள கட்டெரும்பில் இந்த ஆய்வை மேற்கொண்டது.எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழும் பழக்கம் உடையவை.
ஒரு கூட்டத்தை சேர்ந்த எறும்பு மற்றொரு கூட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
கோடைகாலங்களில் இரைதேடும்போது எறும்புகளுக்குள் சண்டை ஏற்படுகின்றது.
அப்போது சில எறும்புகளுக்கு காயம் ஏற்படுகிறது.
மேலும், இரைதேடும் போதும் சில சமயங்களில் எறும்புகள் காயமடைகின்றன.இவ்வாறு காயமடைந்த எறும்புகள் தங்கள் கூட்டத்தை சேரும்போது அவை சிறப்பு கவனிப்பை பெறுகின்றன.
மெகாபொனெரா அனாலிஸ் எனப்படும் எறும்பு வகைகளில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு விபரம் சேகரித்துள்ளார் சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த டாக்டர். எரிக்ப்ராங்க்.
அனாலிஸ் எறும்புகள் தேனீக்களை போன்று ராணி எறும்புகள், படை எறும்புகள், சிறிய எறும்புகள் என்று மூன்று பிரிவுகளாக வசிக்கின்றன.அவை காலை 6மணி முதல் 10மணி வரையிலும் இரவு 7மணியில் இருந்து 10மணி வரையிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.
இந்த எறும்பு கூட்டத்தில் காயமடையும் எறும்புகளை சிறிய எறும்புகள் கூடி தங்கள் வசிப்பிடத்தின் மையத்துக்கு இழுத்துவருகின்றன.காயமடைந்த எறும்பை சுற்றிநின்று நக்குகின்றன. இதனால் காயமடைந்த எறும்பு படிப்படியாக குணமடைகிறது.
தங்களால் இழுத்துவரமுடியாத அளவுக்கு காயமடைந்த எறும்புகளை அப்படியே எறும்புக்கூட்டம் விட்டுச்சென்றுவிடுகிறது என்றும் டாக்டர் எரிக்ப்ராங் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here