மாணவர்களுக்கு கொடூர தண்டனை ! ஆசிரியர் சஸ்பெண்ட்!!

செங்கம்: பள்ளி மாணவர்களை உச்சி வெயிலில் முட்டிபோடவைத்து தண்டனை வழங்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஜமுனா என்பவர் சாரணர் பயிற்சி ஆசிரியராக உள்ளார். அதே பள்ளியில் அண்ணாமலை என்பவர் ஆசிரியராக உள்ளார்.ஜமுனாவிற்கும், அண்ணாமலைக்கும் வெகு நாளாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்குபெறும் மாவட்ட அளவிலான சாரணர் இயக்க விழா நடந்தது.                                                                இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று ஆசிரியை ஜமுனா 10 மாணவர்களை அழைத்துச் சென்றார்.
இது ஆசிரியர் அண்ணாமலைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.யாரைக்கேட்டு சாரணர் விழாவுக்கு சென்றீர்கள் என மாணவர்களை அடித்துள்ளார்.
அவர்களை பள்ளி மைதானத்தில் முட்டி போட வைத்தார். இதனால் மாணவர்கள் அலறித் துடித்தனர்.
அப்படம் இணையத்தில் வெளியாகியது.
அதனைத்தொடர்ந்து ஆசிரியர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here