டிரம்பின் ஐடியாவுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு!!

அமெரிக்கா:பள்ளிகளில் துப்பாக்கிச்சூட்டை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளதற்கு அமெரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ப்ளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவர் அதிரடியாக புகுந்து துப்பாக்கியால் சுட்டார்.
அதில், 17குழந்தைகள் பலியாகினர். இச்சம்பவத்தை தொடர்ந்து இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார் டிரம்ப்.
இனிமேல், துப்பாக்கி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்று அதிபர் கூறியுள்ளார்.

துப்பாக்கிகளை நவீனப்படுத்த உதவும் பம்ப் ஸ்டாக்ஸ் உதிரிபாகத்துக்கு அமெரிக்காவில் தடைவிதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகவும் கவலை தருகிறது. ஆசிரியர்கள் துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி பெற்றால் நல்லது. பள்ளிகளில் 20%ஆசிரியர் துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி பெற்றிருப்பது அவசியம்.

இதனால் அசம்பாவித சம்பங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும். இவ்வாறு டிரம்ப் பேசியுள்ளார்.
இப்பேச்சு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் பெற்றுவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here