சவுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!

சவுதி அரேபியா:சவுதியில் வேலைபார்த்து வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் விரைவில் வேலையிழக்கும் சூழ்நிலை எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.வெளிநாட்டினருக்கு பதில் சவுதியை சேர்ந்தவர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்று சவுதி அரேபியா தொழில்நிறுவனங்களை நிர்பந்தித்து வருகிறது.
இதனால் சில்லறை விற்பனைத்துறையில் கடும் பாதிப்பு ஏற்படவுள்ளது.
நகை விற்பனை, கார் வாடகைக்கு வழங்குதல், அழகுசாதன பொருட்கள் விற்பனை, செல்போன் உதிரிபாக விற்பனை ஆகியவை பாதிப்புக்குள்ளாகும் முக்கிய துறைகள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலி அல் ஹபிஸ், வர்த்தசங்க பிரதிநிதிகளை சந்தித்தார்.
அப்போது உள்நாட்டினருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
உள்நாட்டில் படித்தவர்கள், திறமையானவர்கள் கிடைப்பதில்லை.
இதுபோன்ற கெடுபிடிகளால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுவருகின்றன.

வெளிநாட்டினர் மீதான் வரிவிதிப்பு ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால் சிலகாலம் பழைய நடைமுறை தொடரவேண்டும் என்று தொழிலதிபர்கள் அமைச்சரிடம் வற்புறுத்தினர்.
ஆனால், அரசு இவ்விஷயத்தில் அவ்வளவு சீக்கிரம் தனது நிலையை மாற்றிக்கொள்ளாது என்று அமைச்சர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here